ஒரு லட்சத்து 25,742 பேர் கைது
கடந்த ஜூன் ஆறாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் 26,886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காவற்துறை ஊாடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 24,314 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்திரம் 15,404 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 23,139 பேரும் பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 45,088 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, போதைப்பொருள் மற்றும் பல்வேறுப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் மொத்தமாக ஒரு லட்சத்து 25,742 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.