இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வரும் நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு வார காலத்தில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாயால் சரிவடைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (26) 332,200 ரூபாயாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 326,600 ரூபாயாகச் சரிவடைந்துள்ளது.
4,200 டொலராகக் காணப்பட்ட விலை
இந்த வார ஆரம்பத்தில் 361,000 ரூபாயாக நிலவிய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று 355,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக சந்தையிலும் இந்த மாத ஆரம்பத்தில் சுமார் 4,200 டொலராகக் காணப்பட்ட ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, தற்போது சுமார் 3,900 டொலராகக் குறைந்துள்ளது.
அடுத்த வாரம் அமெரிக்கத் தேர்தல் காலம் என்பதால், டொலர் பலமடைந்துள்ளதுடன் டொலருக்கான எதிர்பார்ப்புகளும் உடனடியாக உயர்ந்துள்ளதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.