புத்தளத்தில் போலி மருத்துவருக்கு வலை வீசும் பொலிஸார்

புத்தளத்தில் போலி மருத்துவருக்கு வலை வீசும் பொலிஸார்

புத்தளத்தில் மருத்துவர் என வேடமிட்டு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இருந்து தங்க ஆபரணங்களை திருடிய நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தளம் மருத்துவமனையில் கண் காது மற்றும் தொண்டை மூக்கு பகுதி தொடர்பில் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இவ்வாறு தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக தெரியவருகின்றது.

மருத்துவ பரிசோதனையின் போது தங்க ஆபரணங்கள் இருப்பது பரிசோதனைக்கு தடையாக காணப்படுவதாக தெரிவித்து இவ்வாறு திருடி தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.