தேர்தலுக்கு பின்னர் வன்முறைகளற்ற அமைதி- கஃபே

தேர்தலுக்கு பின்னர் வன்முறைகளற்ற அமைதி- கஃபே

தேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியாக உள்ளதாக கஃபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

2020 நாடாளுமன்றத் தேர்தல் நிறைவுபெற்று ஒருவாரம் அகியுள்ள நிலையில் குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் அடிப்படையில் இந்தக் காலப்பகுதி அமைதியானது என கஃபே அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.

அத்தடன், தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் கஃபே அமைப்பிற்கு 39 முறைப்பாடுகள் கிடைக்கப்பற்றதாகவும் அவை பாரதூரமான விடயங்கள் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளில் கணிசமானவை தேர்தல் சட்டதிட்டங்களை மீறி வாகன அணிவகுப்புகள் இடம்பெற்றமை தொடர்பாகவே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.