
புதிய வர்த்தகக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – பந்துல குணவர்தன
புதிய வர்த்தகக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) தமது கடமைகளை ஆரம்பித்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டவிரோத வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து, மக்களின் நலனுக்காக புதிய சட்டங்களும், பிரகடனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் கடமைகளை பெறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.