கோட்டாபய - மஹிந்த அரசிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு சுமந்திரன் பதில்

கோட்டாபய - மஹிந்த அரசிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு சுமந்திரன் பதில்

ஸ்ரீலங்காவில் பௌத்த மதத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கோட்டா - மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய மக்கள் இது தொடர்பில் நன்றாக சிந்திக்க வேண்டும்.

கோட்டா - மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ மண்டபத்தில் வைத்து பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பௌத்த மத தலைவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன் பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கொடிகளே அங்கு பறக்கவிடப்பட்டிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.