அர்ச்சுனாவின் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு டிசம்பரில் விசாரணைக்கு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்றைய தினம் (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அதனை மேலதிக விசாரணைக்காக டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.