விகாரைகளுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்

விகாரைகளுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அனுராதபுரத்தில் உள்ள ஜெய ஸ்ரீ மகா போதிக்கு மரியாதை செலுத்தி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பிரதமர் ருவன்வெலி மகா ஸ்தூபத்திற்கு மரியாதை செலுத்தி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதோடு, மிரிசவெடிய மற்றும் அனுராதபுரம் ஜயந்தி விகாரைக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் நேற்றைய தினம் பொல்கொல்ல-சாலவன ஸ்ரீ போதி விகாரைக்கு சென்றதோடு அங்கு பல்வேறு விகாரைகளின் தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.