கல்முனையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

கல்முனையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

கொரோனா வைரஸ் சமூக மட்டத்தில் பரவுவதைத் தடுப்பதற்காக பி.சி.ஆர். பரிசோதனைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் வழிகாட்டல்களுக்கமைய பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் பொலிஸ் நிலைய வளாகத்தில்வைத்து மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் கலந்துகொண்டனர்.