யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி  உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான குறித்த காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (30.09.2026) அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு 351.23 ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணி

அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள், நேற்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றது.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு | Land Release Held By Security Forces In Kks Jaffna

 

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் மற்றும் மேஜர் WMKK. வீரக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.