
கல்பிட்டி கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் பெறுமதியான மஞ்சள் தொகை மீட்பு
கல்பிட்டி பள்ளிவாசல்துறை கடலோரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மஞ்சள் தொகையொன்றை காவல்துறையினர் இன்று காலை (13) கண்டுபிடித்துள்ளனர்.
இவை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்து மறைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
29 பொதிகளில் காணப்பட்ட மஞ்சளின் மொத்த நிறை 1500 கிலோகிராம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேக நபர்களும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 6 ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.