யாருக்கும் அடி பணியமாட்டேன்! புதிய நீதியமைச்சர் எடுத்துள்ள சபதம்

யாருக்கும் அடி பணியமாட்டேன்! புதிய நீதியமைச்சர் எடுத்துள்ள சபதம்

யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன், 19 ஆவது சட்ட திருத்தத்தினை முழுமையாக ஒழிப்பேன்; என்று நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று புதன்கிழமை ஏற்ற பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

அனைத்து மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன். 19 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழித்து அந்தக் குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவேன். இதற்கு தேவையான சட்ட வரைபுகள் விரைவில் தயாரிக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். எந்தவொரு உள்ளூர் அல்லது அனைத்துலக சமூகத்துக்கு நான் அடிபணிய மாட்டேன்” என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.