புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு
தற்போது அரசு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் உட்பட, இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்கள், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு உரித்தான நியமனங்கள் அந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவால் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான உத்தரவை அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அனுப்பியுள்ளார்.
அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அனைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.