டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை

டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக்கும் திட்டத்தின் கீழ் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் முதற்கட்டமாக சில வீதிகள் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கொழும்புத்துறை விபுலானந்தா வீதி, சுவாமியார் வீதி மற்றும் கொய்யாத்தோட்டம் புது வீதி ஆகியன காப்பெற் வீதிகளாக அமைக்கப்படவுள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழில் அமைச்சினால் குறித்த வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றமையால் அவ்வீதிகளின் புனரமைப்பு பணிகள் சற்று தாமதமடைந்திருந்தன. இந்நிலையில் தற்போது அவ்வீதிகளை காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.