இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாயாலும் ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 35 ரூபாயாலும் குறைக்கப்படும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாயால் குறைக்கப்பட்டு 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

 

விலை குறைப்புகளின் பலன்

அத்துடன்  210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு | Cpc Reduction In Furnace Oil And Naphtha Prices

இதேவேளை, இந்த விலை குறைப்புகளின் பலனைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

மேலும் வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த நிவாரணம் பிரதிபலிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.