யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்புக்காக நேற்றுமுன்தினம்(28) வெள்ளிக்கிழமை வழக்கு அழைக்கப்பட்டது.

16 வருட சிறைத்தண்டனை

அதன்போது , எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று , 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது. 

 

யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Court Verdict Father Who Raped Daughter In Jaffna