3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி

3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி

இப்படிதான் முதன்முதல் ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி.

வேலுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னோட வேலை. இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்கிறார்.

எந்தவொரு சிஏஜி ரிப்போர்ட்டும் அரசாங்கத்தை பாராட்டி இருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை நடக்கக் கூடியது. உடனே ஊடகங்கள் எல்லாம், பத்திரிகை எல்லாம் மூன்று பைல்கள் இருக்கிறது..,

ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி

நான் கூட திருவொற்றியூர் கூட்டத்தில் தைரியமாக சொன்னேன். நீ அவிழ் மூன்ற, நான் அவிழ்க்கிறேன் மூன்ற. நான் மோசமான ஆளு. இப்படிதான் முதன்முதல் ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி. அதன் விளைவு என்ன என்பதை அந்த அம்மா உயிரோடு இருந்தா கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

இதேபோல்தான் ஆணவமாக பேசினார். அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு எதுவும் செய்யல. டான்சி நிலத்தை வாங்கினாங்க. அரசு நிலத்தை வாங்கக் கூடாது. நான் டான்சி நிலத்தை வாங்கியது தவறு என ஒரு அறிக்கை கொடுத்தது. திமுக-வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளை காணவில்லை என்று சொன்னார்.

வாய்க்கொழுப்பு

மூன்று பேர்தான் திமுக-வில் வெற்றி பெற்றார்கள். கலைஞர் ராஜினாமா செய்துவிட்டார். இருவர் அவைக்கு சென்றார்கள். அந்த தைரியத்தில் அந்த அம்மா, நான் டான்சி நிலத்தை வாங்கினேன். வாங்கினால் என்ன தப்பு என்று சொன்னார்.

வாம்மா மாட்டினியா நீ என்று சொல்லி., போட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று உள்ளே சென்றார்கள். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. எந்த கொழுப்பும் இருக்கலாம். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. அந்த அம்மா பெரிய தப்பு ஏதும் செய்துவிடல. எனக்கு வேண்டாம் என்று அந்த நிலத்தை திருப்பி கொடுத்திருந்தாலம் முடிஞ்சி போச்சு.

இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.