றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழியருக்கு நடந்த அசம்பாவிதம்! கவலையில் பாஸ்கரன் கந்தையா
கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக சுட்டிக்காட்டிய பாஸ்கரன், ஒரு கிராமத்தின் வளர்ச்சியை தனது சொந்த சகோதரர்கள் போன்றோரே ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, சமூக வலைதளங்களில் வன்மத்தைப் பரப்புவதையும், போதை மற்றும் வன்முறையைத் தவிர்த்து, சக மனிதர்களை மதித்து நடக்குமாறும் இளைய தலைமுறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், சமூக வளர்ச்சிக்காகத் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,