ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் குறித்து இன்று அறிவிக்கப்படுமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் குறித்து இன்று அறிவிக்கப்படுமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெயர், விபரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான மேலும் சில உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரகிறார்.

அதேபோல்இ தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.