யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு 45 வருடங்கள்

யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு 45 வருடங்கள்

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணப் பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் உயிரிழந்த அருட்கலாநிதி H.S. தாவீது அடிகள் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூபி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை குறிப்பிடும் வகையில் 45 விளக்குகள் ஏற்றப்பட்டது.

மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி. சி. அரவிந்தராஜ், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் இ. தயாளன், பொது நூலகப் பிரதம நூலகர் அனுசியா சிவகரன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெ. மயூரன், நூலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.