புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்காக புதிய இணைய வலைத்தளம் அறிமுகம்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்காக புதிய இணைய வலைத்தளம் அறிமுகம்

9 ஆவது நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு, அவர்களின் தனிப்பட்ட விபரங்களை நாடாளுமன்ற செயலகத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற செயலகம்  ‘இணைய பதிவு முறை’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது,  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தகவல்களை வழங்க, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு பின்னர் இணைய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்பிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் செயல்முறை எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம்  திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக,   நாடாளுமன்றம் அதன் செயற்பாடுகளில் பல டிஜிட்டல் வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக இந்த இணைய முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதாவது நாடாளுமன்றத்துக்கு பயணம்  மேற்கொள்ளாமலேயே தங்கள் தொகுதிகளில் தங்கியிருக்கும்போது தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் https://registration.parliament.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் ஊடாக  தொடர்புடைய கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் தகவல்களை அனுப்பலாம்” என குறிப்பிட்டுள்ளார்.