வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தாய்

வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தாய்

யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (வயது 79) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.

அந்நிலையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் நேற்றைய தினம் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்தவேளை, தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலத்துக்கு அருகாமையில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டு காணப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது வீட்டில் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதில், 'எனது சாவிற்கு நான் தான் காரணம். வருத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.