நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்
மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (14) மாலை சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நேர்ந்துள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களாவர்.
தேடுதல் நடவடிக்கை
மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.