ஸ்ரீலங்காவின் அடுத்த பிரதமராக பசில்?

ஸ்ரீலங்காவின் அடுத்த பிரதமராக பசில்?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்து அவரை பிரதமராக்க அரசாங்கம் தயாராகி வருவதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து போட்டியிட்டு களுத்துறை மாவட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

20 வது திருத்தத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து பசில் ராஜபக்ஷவை பிரதமராக்க தயாராகி வருவதாகவும், இதை இன்று ஒரு தீர்க்கதரிசனமாகக் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலிலும் வாக்குகளை எண்ணுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், ஒரே இரவில் வாக்குப் பெட்டிகளை வைத்ததில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.