யாழ்ப்பாணத்தில் அதிரடி: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,900 லீட்டர் எரிபொருள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் அதிரடி: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,900 லீட்டர் எரிபொருள் மீட்பு

ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருட்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று மீட்டனர்.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொறுப்பதிகாரி பிறேமதிலகா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் ஊரெழு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்பொருள் அங்காடியின் களஞ்சியசாலையில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது, பாரிய பரல்களில் (Barrels) அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்வரும் எரிபொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன:

டீசல் 4,700 லீட்டர், பெற்றோல்: 800 லீட்டர், மண்ணெண்ணெய்: 400 லீட்டர்

சட்டவிரோத எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

விசாரணைகளின் நிறைவில், கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள் மற்றும் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.