புதிய அமைச்சரவை குறித்த விடயங்களை அறிந்து கொள்ள விசேட இணையதள பக்கம் அறிமுகம்..!

புதிய அமைச்சரவை குறித்த விடயங்களை அறிந்து கொள்ள விசேட இணையதள பக்கம் அறிமுகம்..!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கட்டமைப்பு மற்றும் விடயதானங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

இதன்படி உள்விவகாரம், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்து ராஜாங்க அமைச்சு என்பன பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.


ஒவ்வொரு அமைச்சுக்களினதும் விடயதானங்கள் தொடர்பில் சிறப்புரிமை, குறித்த நிறுவனம் மற்றும் சட்டவரையறை உப தலைப்பின் கீழ் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் அதனை எமது இணைத்தளத்தில் பிரவேசிப்பதுடன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://registration.parliament.lk என்ற உத்தியோகபுர்வ இணையத்தளத்தில் இது குறித்த முழுமையான தகவல்களை அறிய முடியும் என கூறப்பட்டுள்ளது.