கொவிட்-19: ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிப்பு- 171பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிப்பு- 171பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடான ரஷ்யாவில், கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 171பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,142ஆக உள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 485,253ஆக உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 236,714பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 242,397பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ள போதும், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதனிடையே, இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான முடக்கநிலையின் கீழ் இருந்த தலைநகர் மாஸ்கோவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.