சமந்தாவுக்கு தங்கையாகும் ராஷ்மிகா!

சமந்தாவுக்கு தங்கையாகும் ராஷ்மிகா!

பிரபல தெலுங்கு நடிகைகளான சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குறித்த திரைப்படத்தில் ராஷ்மிகா, சமந்தாவுக்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாவை பொறுத்தவரையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க உள்ளார். பின்னர் கேம் ஓவர் படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அதேபோல் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு  ஜோடியாக புஷ்பா படத்திலும், கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’  திரைப்படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது