புலம்பெயர்ந்தோரின் கைரேகையை எடுக்கும் அரசாங்கத்தின் உத்தரவினால் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும்!

புலம்பெயர்ந்தோரின் கைரேகையை எடுக்கும் அரசாங்கத்தின் உத்தரவினால் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும்!

Eurotunnel ரயில்களில் ஏற முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரின் கைரேகைகளை எடுக்குமாறு அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து, பிரித்தானிய எல்லைப் படை அதிகாரிகள் வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என கலீஸில் (Calais) உள்ள பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நெருக்கடி இருந்தபோதிலும், சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் பதிவு அதிகரிப்புக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய நடவடிக்கை உடல் தாக்குதல்களுக்கும் காயங்களுக்கும் வழிவகுக்கும் என்ற அச்சங்கள் உள்ளன.

இதனிடையே, தீங்கைக் குறைக்க பயனுள்ள இடர் மதிப்பீடுகள் செய்யப்பட்டதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் முடக்கநிலையை நடைமுறைப்படுத்தியதிலிருந்து, 1,000இற்க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஒரே நாளில் 166 புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் பிரித்தானியாவை அடைய முயற்சித்தனர்.

பிரித்தானியாவையும் பிரான்சையும் இணைக்கும் நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்தான Eurotunnel ரயில்கள், ஆங்கிலக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடைகிறது.