ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று..!

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற தெரிவு குறித்த தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாட் பதீயுதின், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப்; ஹக்கிம் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இன்றைய கூட்டத்தின் போது தமது தரப்பினருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்படவில்லையாயின் நாடாளுமன்றத்தில் தனித்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் மனோகணேசன் குறிப்பிட்டிருந்தார்.