குருநாகல் மேயர் மற்றும் 04 சந்தேக நபர்களும் நாட்டைவிட்டு வெளியேற தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குருநாகல் மேயர் மற்றும் 04 சந்தேக நபர்களும் நாட்டைவிட்டு வெளியேற தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பாக குருநாகல் மேயர் மற்றும் 04 சந்தேக நபர்களை கைது செய்ய குருநாகல் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு குறித்த நபர்களை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து நீதிமன்றம் இன்று (திங்கட்கிளமை) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை நீதிமன்றத்தினூடாக பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு முன்னர் பணிப்புரை விடுத்திருந்தார்.

இருப்பினும் குறித்த பிடியாணை உத்தரவை பொலிஸார் நிறைவேற்ற தவறிய நிலையில் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவை கைது செய்வதற்காக 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.