ஹட்டன் பயணிக்கும் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

ஹட்டன் பயணிக்கும் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

ஹட்டன்-நல்லதண்ணி வீதியில் மண்மேடி இடிந்து விழுந்ததன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

மோஹினி எல்ல பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகில் உள்ள பாரிய மண்மேடு ஒன்று பகுதியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வீதியில் நிரம்பியிருந்த மண் தற்போது அகற்றப்பட்டாலும், குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாக செல்லுமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மேல் கொத்மலை பகுதியில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.