இன்றைய வானிலை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இன்றைய வானிலை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (18.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இலங்கையில் நேற்று (17) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்றைய வானிலை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Methodology Department Weather Forecast Today

நுவரெலியா மாவட்டத்தில் வெப்பநிலை 8.0 பாகை செல்சியசாகக் குறைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.