பேஸ்புக்கில் கோடிக்கணக்கான ரூபாவை செலவிட்ட இலங்கை அரசியல்வாதிகள்!

பேஸ்புக்கில் கோடிக்கணக்கான ரூபாவை செலவிட்ட இலங்கை அரசியல்வாதிகள்!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்காக சமூக வலைத்தளங்கள் பெருமளவு பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசியல்வாதிகளால் பேஸ்புக் ஊடாக மேற்கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக 111 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2020 மே மாதம் முதல் கடந்த 6ஆம் திகதி பேஸ்புக் ஊடாக, தற்போது எதிரணி உறுப்பினர்களாக மாறியுள்ள அரசியல்வாதிகளின் பெயரில் மாத்திரம் இந்த அளவு செலவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பேஸ்புக் ஊடாக அதிக பணத்தை சஜித் பிரேமதாஸவே செலவிட்டுள்ளார். அவர் 124 விளம்பரங்கள் செய்துள்ளார். அதற்காக 40 இலட்சத்து 86 ஆயிரத்து 556 ரூபாவை செலவிட்டுள்ளார்.

அதற்கமைய அடுத்தப்படியாக சுனேத்ர சமரகோன் 36 இலட்சத்து 96 ஆயிரத்து 644 ரூபாவை செலவிட்டு 412 விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.

மூன்றாவதாக அதிக பணத்தை அங்கஜன் ராமநாதன் செலவிட்டுள்ளார். அவர் 30 இலட்சத்து 65 ஆயிரத்து 528 ரூபாவை செலவிட்டு 273 விளம்பரங்கள் செய்துள்ளார்.

அதேபோல் வெரோன் குணரத்ன, கனிஷ்க சேனாநாயக்க, ஹர்ஷ டி சில்வா, விஜேதாஸ ராஜபக்ஷ, திலங்க சுமத்திபால, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே ஆகிய 10 உறுப்பினர்களே அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.