2026 தரம் 6 மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 தரம் 6 மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வி ஆண்டிற்காக தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை (Appeals) சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜனவரி 25 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையூடாக (Online) மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.moe.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் 3 பாடசாலைகளுக்கு மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

2026 தரம் 6 மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு | First Round Appeal For Admission Students Grade 6

இதேவேளை, http://g6application.moe.gov.lk/#/ எனும் நேரடி இணைப்பினூடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.