2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்கள் பட்டியலில் இலங்கை
2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்கள் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது.
U.S. News & World Report இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள ஏனைய முன்னணி சுற்றுலா தலங்களை பின்தள்ளி இலங்கை இந்த இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட சுற்றுலா அனுபவங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தரவு பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்துள்ளது.
அந்த பட்டியலில் அணுகல் எளிமை, மலிவு விலை, கலாச்சாரம், சமையல் செழுமை, சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுலா ஈர்ப்பு போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறிப்பாக நாட்டின் உலகத் தரம் வாய்ந்த கடற்கரைகள், யுனெஸ்கோ மரபுரிமை தளங்கள் மற்றும் சிறந்த வனவிலங்கு சபாரி அனுபவங்களை மதிப்பிடுகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கான இரண்டாம் நிலை நிறுத்தத்திலிருந்து தனியாக பயணிக்க கூடிய இடமாக இலங்கை மாறியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
40 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத நுழைவுக் கொள்கை, ஆடம்பர சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் அழகிய ரயில் அனுபவங்களின் விரிவாக்கம் ஆகியவற்றால் வலுப்படுத்தப்பட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான சாதனை எண்ணிக்கையிலான வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ள நிலையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.