வெளிநாட்டு இளம் பெண் இலங்கையில் செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மடகாஸ்கரிலிருந்து இளம் பெண்களை விசா இல்லாமல் நாட்டிற்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, மடகாஸ்கரைச் சேர்ந்த இளம் பெண்ணை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நேற்று (29) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் சந்தேக நபரை சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் குறுகிய கால விசாவில் நாட்டிற்கு வந்து மடகாஸ்கரிலிருந்து இளம் பெண்களை நாட்டிற்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், விசா ரத்து செய்யப்பட்ட பின்னரும் அவர் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்து அந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
மடகாஸ்கரிலிருந்து இளம் பெண்களை நாட்டிற்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.