மூவருக்கு இடையில் தகராறு; காதலனின் கத்திக்குத்தில் காதலி படுகாயம்

மூவருக்கு இடையில் தகராறு; காதலனின் கத்திக்குத்தில் காதலி படுகாயம்

காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (18) இரவு வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மூவருக்கு இடையில் தகராறு; காதலனின் கத்திக்குத்தில் காதலி படுகாயம் | Dispute Broke Girlfriend Injured Attack Boyfriend

படுகாயமடைந்த காதலி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதலனுக்கும் காதலிக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.