மண்சரிவு அபாயம்.. கண்டியில் காலவரையின்றி மூடப்படும் பாடசாலை

மண்சரிவு அபாயம்.. கண்டியில் காலவரையின்றி மூடப்படும் பாடசாலை

கண்டியில் உள்ள மகாமாய பெண்கள் பாடசாலை மண்சரிவு அபாயத்தால் தொடர்ந்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் குழுவினர் ரஜ பிஹில்லா மாவத்தையை ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாடசாலைக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் மேலும் மண்சரிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து, பாடசாலையை காலவரையின்றி மூடுவதற்கு அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவு அபாயம்.. கண்டியில் காலவரையின்றி மூடப்படும் பாடசாலை | Mahamaya Girls College Kandy Close Landslide Risk

மேலும், பல வீடுகள் மற்றும் விருந்தகங்களை உள்ளடக்கிய பாடசாலைக்கு மேலே உள்ள பகுதியில், மீண்டும் மண்சரிவு ஏற்பட்டால் பாடசாலை கட்டிடங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் கனமழை தொடர்வதால் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் ஏனையோர் விழிப்புடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.