இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அவர் கூறினார்.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி | Irregular Weather In Sri Lanka Leaves 9 Dead

இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது