வெளிநாடொன்றில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினர்

வெளிநாடொன்றில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வொண்டிப் பகுதியில், வவுனியாவைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் மற்றும் 36 வயதான பெண் ஒருவர் நள்ளிரவு வேளையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றிருந்தாலும், அவர்கள் மீண்டும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்துவந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாடொன்றில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினர் | Eelam Tamil Couple Arrested France Country Middle

இதே நேரத்தில், பிரான்ஸ் அரசாங்கம் மனைவி மற்றும் அவளது இரு குழந்தைகளுக்காக வழங்கி வந்த சமூக நல உதவித் தொகைகளை மனைவி தொடர்ந்து பெற்றுவந்ததாகவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

விவாகரத்து செய்யப்பட்ட நிலையிலும் கணவனுடன் இரகசியமாக வசித்து கொண்டிருந்தமை, அரசாங்க நல நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அதிகாரிகள் இருவரின் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் திடீர் சோதனை நடத்தி கைது செய்துள்ளனர்.

இருவரும் தற்போது மேலதிக விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.