நாட்டின் சில இடங்களுக்கு வெள்ள எச்சரிக்கை..!
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களு கங்கையின் குட கங்கை துணைப் படுகையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது.
அத்துடன் அந்தப் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக, களு கங்கைப் படுகையின் ஊடாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் அதன் வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.