கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain With Massive Thunder And Lightning

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.