கடுகண்ணாவ மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடுகண்ணாவ மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கியிருந்த மேலும் இருவர், சற்றுமுன்னர் உடலங்களாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.

கடுகண்ணாவ மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Death Toll In Kadukannawa Landslide Increases

இந்தநிலையில், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.