இலக்கிய உலகில் AI ஆதிக்கம் ; எழுத்தாளர்கள் விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை

இலக்கிய உலகில் AI ஆதிக்கம் ; எழுத்தாளர்கள் விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக எதிர்காலத்தில் மனிதர்களால் எழுதப்படும் புத்தகங்கள் மற்றும் நாவல்கள் 'அரிதான ஆடம்பரப் பொருளாக' (Rare Luxury Goods) மாறும் என்று நாவலாசிரியர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், AI உலக இலக்கியச் சந்தையை ஒரு 'இரட்டை அடுக்குச் சந்தையாக' (Two-tier market) மாற்றும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலக்கிய உலகில் AI ஆதிக்கம் ; எழுத்தாளர்கள் விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை | Ai Dominance Literary World Writers Issue Warning

கேம்பிரிட்ஜ் அறிக்கையின் முதன்மை ஆராய்ச்சியாளர், கிளெமென்டைன் காலெட் (Dr. Clémentine Collett), இது பெரிய சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், எனவே இலக்கியத் துறையைப் பாதுகாக்க AI-ஐச் சுற்றி பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை (Guardrails) விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆய்வின்படி, இங்கிலாந்தின் வெளியீட்டுத் துறையில் உள்ள 51% நாவலாசிரியர்கள், AI தங்களது பணியைத் முழுவதுமாக அபகரித்துவிடும் என்று அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, புனைகதை (Fiction) எழுதுபவர்கள் மத்தியில் இந்த அச்சம் அதிகமாக உள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், ஜெனெரேட்டிவ் AI கருவிகள் (Generative AI tools) மற்றும் LLM (Large Language Model) மூலம் எழுதப்பட்ட புத்தகங்கள் சந்தையில் அதிகரிப்பது குறித்து கடுமையான அச்சம் நிலவுவது தெரியவந்துள்ளது.

இது பதிப்புரிமை மீறல், வருவாய் இழப்பு மற்றும் கலை வடிவத்தின் எதிர்காலம் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.