விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: உர மானியமாக மில்லியன் ரூபாய்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: உர மானியமாக மில்லியன் ரூபாய்

இம்முறை பெரும்போகத்திற்காக 470,000 விவசாயிகளுக்கு உர மானியமாக 4,822 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பில் (Colombo) நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உர மானியங்களை வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் (Jaffna) நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில், விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெறுமாறு வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: உர மானியமாக மில்லியன் ரூபாய் | Fertiliser Subsidy Money Deposited To Farmers Acc

தற்போது மழை பெய்த பின் காற்றோடு சேர்ந்து குளிருடனான காலநிலை அதிகமாக நிலவுவதால் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் ஆரம்பித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வயல் நிலங்களில் குறித்த நோய் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பகுதிகளிலும் நோய் தாக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் நிலவுகிறது.

ஆகவே, விவசாயிகள் குறித்த நோய் தாக்கத்தை ஆரம்பத்தில் கட்டுப்படுத்துவதற்கு அருகில் உள்ள விவசாய போதனாசிரியர்களை அணுகி அவர்களின் ஆலோசனையை பெற்று கிருமிநாசினிகளை விசுறுமாறு அறிவுறுத்துகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.