விரைவில் சிஐடியிடம் சிக்க போகும் முன்னணி நடிகை.. கெஹல்பத்ரவின் அதிர்ச்சி வாக்குமூலம்!

விரைவில் சிஐடியிடம் சிக்க போகும் முன்னணி நடிகை.. கெஹல்பத்ரவின் அதிர்ச்சி வாக்குமூலம்!

கெஹல்பத்ர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றபுலனாய்வு திணைக்களத்திந்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே, குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

அதன்படி, நாட்டின் பிரபல நடிகை ஒருவரிடமிருந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைப்பு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த நடிகையும் கெஹல்பத்தர பத்மேவும் துபாயில் ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக பத்மே குறிப்பிட்டுள்ளார். 

அதன்போது, பத்மே, தன்னை துபாயைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபர் என்று குறித்த நடிகைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் அவரது போலி உருவப்படத்தால் ஏமாற்றப்பட்டு இந்த படத்திற்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில், விசாரணையில், சம்பந்தப்பட்ட நடிகை துபாய்க்கு அடிக்கடி பயணிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவிடம் கண்டெடுக்கப்பட்ட கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகளை ஆய்வு செய்ததில், அவருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல மொடல்கள் மற்றும் நடிகைகளிடம் சிஐடி இதுவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 

அவர்களில் நான்கு பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் அனைவரும் 2022ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பத்மேவை அடையாளம் கண்டுகொண்டதாகக் கூறியுள்ளனர்.

மற்ற இரசிகர்களைப் போலவே, அவர் தங்களுடன் புகைப்படம் எடுத்ததாகவும், தங்களுக்குள்வேறு எந்த உறவும் இல்லை என்றும் குறித்த நடிகைகள் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கெஹல்பத்தர பத்மேவை திரைப்படங்களைத் தயாரிக்கவும் நடிக்கவும் அழைத்ததாகக் கூறப்படும் முன்னணி நடிகையிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்படுகின்றது. 

எனவே, இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய அடுத்த சில நாட்களில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அவர் வரவழைக்கப்படுவார் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.