விண்வெளிக்குச் சென்ற முதல் பூனைக்கு இரண்டு மாதங்களில் நடந்த துயரம்

விண்வெளிக்குச் சென்ற முதல் பூனைக்கு இரண்டு மாதங்களில் நடந்த துயரம்

வரலாற்றில் முதல் முறையாக பிரான்ஸ் நாட்டினரால் விண்வெளிக்குப் பூனை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

1963 ஆம் ஆண்டு, பிரான்ஸ் தனது விண்வெளி ஆராய்ச்சி முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபெலிசெட் (Felicette) என்ற பூனையினை விண்வெளிக்கு அனுப்பியது. இது வெரோனிக் AGI 47 ரொக்கெட்டில் 13 நிமிடங்கள் நீடித்த பயணமாகும்.

விண்வெளிக்குச் சென்ற முதல் பூனைக்கு இரண்டு மாதங்களில் நடந்த துயரம் | Tragic End Of First Cat In Space After 2 Months

ஃபெலிசெட், 14 பெண் பூனைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு அமைதியான tuxedo பூனையாகும் ஆகும். பயணத்தின் போது, அந்த பூனைக்கு 5 நிமிடங்கள் எடை இழந்ததாகக் கூறப்படுகிறது.

பயணத்திற்குப் பின்னர், பூனை பாதுகாப்பாக மீட்கப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அதன் மூளை ஆய்வுக்காகக் கருணைக் கொலை செய்யப்பட்டது.

ஃபெலிசெட், Laika என்ற ரஷ்ய நாய்க்குப் பின்னர், விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் பூனை என்ற பெருமையைப் பெற்றது.

அத்துடன் ஃபெலிசெட்டின் பயணம், பிரான்ஸின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.