வெளிநாடொன்றில் சிறையில் ஏற்பட்ட வன்முறை பலர் பலி

வெளிநாடொன்றில் சிறையில் ஏற்பட்ட வன்முறை பலர் பலி

ஈக்வடோர் (Ecuador)நாட்டு சிறையில் வெடித்த வன்முறை சம்பவத்தில் கைதிகள் 31 பேர் கொல்லப்பட்டனர்.

  தென் அமெரிக்க நாடான ஈக்வடோர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிறைகளில், கைதிகள் இடையே வன்முறை அடிக்கடி நிகழ்கிறது. மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

  துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில், கைதிகள் 31 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் கைதிகள் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரிவந்தது. மேலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி சில கைதிகள் தப்பிச் சென்றனர்.

வெளிநாடொன்றில் சிறையில் ஏற்பட்ட வன்முறை பலர் பலி | Ecuador Prison Rioting

 இந்த குற்றசம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி டேனியல் நோபோவா உறுதி அளித்துள்ளார். செப்டம்பரில் நடந்த கலவரத்தில், 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். தற்போதும் மீண்டும் அரங்கேறிய கலவரத்தில், கைதிகள் 31 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.