பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம் !
பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் மற்றும் பதவி நிலை மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைய ஊடகமொன்றுக்கு செவ்வியொன்றை வழங்கி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடமாற்றங்கள் குறித்த பேச்சுக்களும் எழுந்துள்ளன.
குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பிரிவிற்கும், மத்திய மாகாணத்திற்கும் பொறுப்பாக கடமையாற்றிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்தபடியாக நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு கூடுதல் அதிகாரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.